உலகச் சூழல் தினம் ஜூன் 5

நாம் அன்னையர் தினம் கொண்டாடுகிறோம், தந்தையர் தினம் கொண்டாடுகிறோம். குழந்தைகள் தினம் இப்படி.  இவையெல்லாம் உறவு குறித்தவை. இன்று சூழல் தினம்! நமக்கும் சூழலுக்குமான உறவு என்ன? இன்று பல குழந்தைகளுக்கு "சிக்கன்" என்றால் ஓடியாடித்திரியும் கோழி என்று தெரியாது. KFC போனால் கிடைக்கும் உணவு என்று மட்டுமே தெரியும். அவளவுதூரம் நம் வாழ்வு தொடர்பற்று இருக்கிறது. ஏதோ சாப்பாடு எங்கிருந்தோ தொடர்ந்து வரும், நீர் எப்போதும் கிடைக்கும், காற்று எப்போதும் அடிக்கும், மழை பெய்யும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். நம் சாப்பாடு எங்கிருந்து வருகிறது? சமகால விவசாய முறைகள் என்ன? அதன் தொழில் நுட்பம் என்ன? அதனால் சூழல் அடையும் பாதிப்பு என்ன? எனக் கேட்டால் தெரியாது! நாம் அருந்து நீர் சுத்தமாக உள்ளதா? என்றால் தெரியாது. ஏதோ குழாயைத் திறந்தால் நீர் வருகிறது! அவ்வளவுதான் தெரியும்! நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாக உள்ளதா? ஏன் காடுகள் அழிவுறுவது பற்றிச் சிலர் ஐயுறுகின்றனர். ஏன் சூழல் பன்முகத்தன்மை குறைகிறது என்று பலர் அரற்றுகின்றனர்? தெரியாது. ஏதோ பசியாற கடைக்குப் போனால் உணவு கிடைக்கிறது. மகிழ்ச்சி என்று இருக்கிறார்கள்! அந்த உணவு எவ்வளவு தூரம் மாசு பட்டிருக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் கூடப் பலருக்குக் கிடையாது.

நீங்கள் அப்படிப் பட்டவரா? அவ்வாறெனில், இன்று கேளுங்கள் அத்தனை கேள்விகளையும். இன்று சூழல் தினம்! உங்களுக்கும் சூழலுக்குமான உறவு பற்றிச் சிந்திக்கும் தினம்.

இன்று காலை 8 மணிக்கு மலேசிய தேசிய வானொலி "மின்னல் எஃப்.எம்" என்னை வைத்து ஒரு சிறப்புப் பேட்டி எடுத்தது. அதைச் சிரமம் பாராமல் பள்ளி ஆசிரியர் செல்வி வேதநாயகி ஒலிப்பதிவு செய்துவிட்டார். அவர் பதிவு செய்து நான்கு ஒலிச்சரடுகள் இதோ:
6 பின்னூட்டங்கள்:

Krishna Moorthy S 6/05/2016 05:48:00 PM

ஒலிப்பதிவைக் கேட்க முடியவில்லையே? என்ன ப்ளேயர்?

Narayanan Kannan 6/05/2016 06:57:00 PM

What browser that you use? It works fine with Google Chrome in Windows 10.

Krishna Moorthy S 6/05/2016 07:14:00 PM

குரோம் தான், விண்டோஸ் 10 ஆனால் எனக்குப் பிழைச் செய்தி வருகிறதே! கூகிள் ப்ளஸ்ஸில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வேறு போட்டிருந்தேன்

Krishna Moorthy S 6/05/2016 07:17:00 PM

இப்போது வேலை செய்கிறது நன்றி முழுதும் கேட்டுவிட்டுத்திரும்ப வருகிறேன்

jalpa prajapati 1/13/2017 04:49:00 PM

Really this is very great information sharing with us. Thanks lot.Examhelpline.in

GST Training Delhi 9/29/2017 12:39:00 PM

I am extraordinarily affected beside your writing talents, Thanks for this nice share.