tag:blogger.com,1999:blog-5593630.post4837987631248832717..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: இந்திய ஆங்கிலப் பெயர்கள்Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5593630.post-84796922215808932922007-06-26T10:25:00.000+05:302007-06-26T10:25:00.000+05:30ஜடாயு: இதை ரொம்ப சென்சிடிவாகப் பார்க்க வேண்டாம். உ...ஜடாயு: இதை ரொம்ப சென்சிடிவாகப் பார்க்க வேண்டாம். உலக அரங்கில் இந்தியா பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தொண்டு தொற்று இந்தியாவிற்கு மிக ஆழமான கலாச்சார அடையாளமுண்டு. அதை உலகு அறிந்தே வைத்துள்ளது. நான் சொல்ல வருவது, இந்தியா பொருளாதார ரீதியில் சில சின்ன சின்ன அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்ளலாம் என்பதே. சீனர்கள் சின்னப் பெயர் மாற்றத்தால் தங்களது பொதுக் கலாச்சார அடையாளத்தை இழந்துவிடவில்லை. தங்களுக்குள் சீனப்பெயரையே பயன்படுத்துகின்றனர். வெளி மனிதர்களுக்கு சௌகர்யமாக இருக்க ஆங்கிலப் பெயர்கள். அவ்வளவே! இந்தியாவில் வாழ்பவர்கள் ஆங்கிலப் பெயர் வைத்துக் கொள்கிறார்கள் என்று நீங்கள் சொல்வது தாழ்வு மனப்பான்மையின் அடையாளம். அதை நாம் கண்டிக்கலாம். ஆனாலும், சாதீய கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியாவில் பெயர் மாற்றம் என்பது கூட சமூக அந்தஸ்தை மாற்றும் விஷயம். அந்த ரீதியில் அதை நான் வரவேற்கிறேன். பெரியாழ்வார் சொல்வது போல் எல்லோரும் நாரணனின் நாமங்களை வைத்துக் கொள்ளலாம். அது ஆன்ம பலமும் கூட!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-2584763694259931162007-06-25T12:54:00.000+05:302007-06-25T12:54:00.000+05:30கண்ணன், இது நீங்கள் சொல்வது போல நடைமுறை உளவியல் அல...கண்ணன், இது நீங்கள் சொல்வது போல நடைமுறை உளவியல் அல்ல, ஒரு ஆழமான அடையாள, கலாசார மறுப்பு சமாசாரம் என்று நான் நினைக்கிறேன். இன்று இந்தியாவிலேயே நகர்ப்புறங்களில் இந்துக்களே தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் ஆங்கில மயமான பெயர்கள் (ஜோ, ஜிம்,டேவ், பில், டெய்சி, பிங்கி, ரோஸ், ஃபியோனா,... ) வைத்துக் கொள்கிறார்கள். .சகிக்கவில்லை, நாராசமாக இருக்கிறது. இனிமையும், பொருளழகும் கொஞ்சும் விதவிதமான ஏராளமான பெயர்கள் இந்து மரபில் இருக்கும்போது, இதற்கு அவசியம் என்ன? பல இந்தியப் பெயர்கள் ஏற்கனவே உலக அரங்கில் நிலைபெற்றுவிட்டன - டில்பர்ட் கார்ட்டீன்களில் கூட அசோக் என்று ஒரு இந்திய டெக் நிபுணர் பாத்திரம் வந்தாயிற்று!<BR/> <BR/>சொல்லப் போனால், யோகமும், ஆயுர்வேதமும், இந்திய மெய்யியலும், நுண்கலைகளும் உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் இந்த சூழலில், இந்துப் பெயர்கள் வைத்துக் கொள்வது கௌரவமாக அல்லவா கருதப் பட வேண்டும்? அமெரிக்காவில் எத்தனன இந்திய சாதனையாளர்கள் எத்தனை துறைகளில் வந்திருக்கிறார்கள் - இவர்கள் தங்கள் பெயர்களையா மாற்றிக் கொண்டார்கள்? <BR/><BR/>கிறித்தவராக மாறிவிட்ட பாபி ஜிண்டால் போன்ற இந்திய வம்சாவளியினர் பற்றி ஏன் பேச வேண்டும் -மதத்தையே மாற்றிக் கொண்டவனுக்கு பெயர் மாற்றமா பெரிய விஷயம்? அந்த ஜிண்டாலை இன்னும் ஒட்டிவைத்திருப்பது இதை வைத்து கொஞ்சம் இந்தியர்களின் அரசியல் ஆதரவு தேறுமா என்பதற்காகத் தான்!ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.com